Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
குரு
ஒரு நாள் இரவு, திடீரென கண் விழித்த மனைவி கணவனை காணாமல் தேடினாள். மாடி அறையிலிருந்து கீழே வந்தாள். கணவன் அங்கே சமையலறையில் கையில் காப்பியுடன் அமர்ந்திருந்தான். அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். கண்களின் வழியும் நீரை கையால் துடைத்துக்கொண்டே காப்பியை பருகினான்.

"என்னங்க? இங்க உட்கார்ந்து இருக்கீங்க?"

"உனக்கு ஞாபகம் இருக்கா? 20 வருஷத்துக்கு முன்னால நாம லவ் பண்ண ஆரம்பிச்சோம். அப்போ உனக்கு வயசு 20."

"ஆமாங்க :)"

"நாம ஒருநாள் பார்க்ல ஒன்னா இருந்தப்போ உங்க அப்பா பாத்துட்டார்."

"ஆமாங்க"

"துப்பாக்கியை காட்டி மரியாதையா எம்பொண்ண கட்டிக்க, இல்லாட்டி உன்ன 20 வருஷம் உள்ள தூக்கி போட்ருவேன்னு மிரட்டுனாரு."

"ஆமாங்க! ஞாபகம் இருக்கு"

அவன் கண்ணீரை துடைத்துக்கொண்டே

"இன்னிக்கு நான் ரிலீஸ் ஆயிருப்பேன்."

"!!??!!"


அப்படியே தமிழ்மணத்தில் உங்க ஓட்டை போடுங்க...